search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் கண்டிப்பு"

    • கள்ளக்குறிச்சி அருகே தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டார்.
    • தாய் செல்வி மகள் சரிவர வேலை செய்யவில்லை என்று கேட்டர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்மனைவி செல்வி (வயது36). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதைப்போல மகனும் தந்தையுடன் சென்று விட்டார். இவருடைய மகள் தமிழரசி மட்டும் தாயுடன் வசித்து வந்தார். மேலும் தமிழரசி டிப்ளமோ நர்சிங் படித்து தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டு விட்டு பருத்தி வயலில் மொக்கு போடும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தாய் செல்வி மகள் சரிவர வேலை செய்யவில்லை என்று கேட்டர். 

    இதனால் மனமுடைந்த தமிழரசி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிகொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செல்வி அளித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா. இவர்களது மகள் சூர்யா (வயது 18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்து விட்டார். இதனால் சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே சூர்யாவுக்கு திருமண வயது எட்டியதால் அவருக்கு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.

    இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததால் திருமண செலவுக்காக சுதா பல இடங்களில் பணம் கடன் கேட்டார். ஆனால், அவர் கேட்ட இடங்களில் எல்லாம் பணம் இல்லை என்று கூறி விட்டனர்.

    சம்பவத்தன்று இதுபற்றி சுதா தனது மகள் சூர்யாவிடம் உனது ராசி என்ன ராசியோ கேட்ட இடங்களில் எல்லாம் பணம் தர மறுக்கிறார்கள் என கூறினார்.

    தாய் இதுபோன்று கூறியதால் சூர்யா மன முடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார்.

    இதில், மயங்கி விழுந்த சூர்யாவை அவரது தாய் சுதா மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூர்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாத்தான்குளம் அருகே செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    நாங்குநேரி அருகே உள்ள கீழசிந்தாமணி மேல தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் அண்டோ லிவின் (வயது 18). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் சரியாக படிக்காமல் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். 

    இதில் மனமுடைந்த அண்டோ லிவின் பேய்குளத்தில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சிதம்பரத்தில் 1-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகள் ரம்யா(வயது 26). என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும் வருகிற 1-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோரும் தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்த நிலையில் ரம்யா வீட்டில் வேலைகளை செய்யாமல் இருந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரம்யா அதே பகுதியில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் ரம்யா தூக்குப்போட்டு கொண்டார்.

    அவர் தூக்கில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமதாஸ், சிதம்பரம் நகர போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தாய் கண்டித்ததால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி தாய் கண்டித்ததால் பெயிண்டர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் பரந்தாமன் என்கிற அய்யப்பன் (வயது 26), பெயிண்டர் வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட பரந்தாமனை அவரது பெற்றோர், விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

    அங்கு சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின்னர் கடந்த ஜனவரி மாதம் பரந்தாமன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். அவ்வாறு வேலைக்கு செல்லும்போது அவருக்கு மீண்டும் குடிப்பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் இந்த குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி பரந்தாமனை அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பரந்தாமன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவை அருகே மதுபழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான நாவற்குளம் குளத்து மேட்டு வீதியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 26). கூலித்தொழிலாளியான இவர் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

    இதனால் இவருக்கு திருமணம் செய்ய யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து மது பழக்கத்தை மறக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரந்தாமனை அவரது தாய் கிருஷ்ணவேணி அழைத்து சென்று கோலியனூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.

    அங்கு சில நாட்கள் மட்டுமே பரந்தாமன் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஆனாலும் மது பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நேற்று பரந்தாமனை அவரது தாய் கிருஷ்ணவேணி கண்டித்தார். பின்னர் அவர் வெளியே சென்று விட்டார்.

    தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த பரந்தாமன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தாயின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கும்பகோணத்தில் பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வி‌ஷம் குடித்த அண்ணன்- தம்பி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி அம்முனி. இவர்களது மகன்கள் ஆகாஷ் (வயது 13), ஹரிஸ் (11). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஹரிஸ் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். ஆதலால் அம்முனி, இருவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஆகாஷ் மற்றும் ஹரிஸ் ஆகிய 2 பேரும் வீட்டில் வைத்திருந்த பூச்சிமருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

    இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தீவிர சிகிச்சை அளித்தும் அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் அண்ணன்-தம்பி 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மேலக்காவிரி வடக்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40) டிரைவர். இவரது மனைவி சீத்தாலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூத்த மகன் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஹரீஸ் 6-ம் வகுப்பும், ரித்தீஸ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அண்ணன்-தம்பியான ஆகாஷ், ஹரீஸ் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனை பெற்றோர் கண்டிப்பது வழக்கம்.

    இதேபோல் இன்றும் சகோதரர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லையாம். ஆனால் 3-வது மகன் ரீத்தீஸ் பள்ளிக்கு சென்று விட்டார். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்லாததால் ஆத்திரம் அடைந்த தாய் சீத்தாலட்சுமி மகன்கள் 2 பேரையும் கடுமையாக திட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆகாஷ், ஹரீஸ் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்ததை கண்ட தாய் சீத்தாலட்சுமி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வைகைபுதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன். இவர் வைகை அணை பொதுப்பணித்துறையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சாருக்கா பாண்டிஸ்ரீ (வயது16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் தாயார் கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த சாருக்கா பாண்டிஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சமீப காலமாக பள்ளி மாணவ-மாணவிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு காலகட்டத்தில் அதற்கு அடிமையாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ-மாணவிகளை அவரது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    செல்போனில் அதிகம் பேசுவது, விளையாடுவது போன்றவற்றால் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் மனதளவிலும் பாதிக்கப்படும் அவர்கள் சிறிய ஏமாற்றத்தை கூட தாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

    இதன் காரணமாகவே இளம்வயதில் தற்கொலை உள்ளிட்ட ஆபத்தான முடிவுகளை எடுக்கின்றனர். எனவே பள்ளிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திலாஸ்பேட்டையில் காதலை தாய் கண்டித்ததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை வீமன்நகர் ஓடைத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர் புதுவை சட்டசபையில் தினக் கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகள் ராஜவேணி (வயது 21). இவர் பிளஸ்-2 படித்து விட்டு போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக பயிற்சிக்கும் சென்று வந்தார்.

    இதற்கிடையே ராஜவேணி ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் லட்சுமி கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ராஜவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றார். இதில் மயங்கி விழுந்த ராஜவேணியை அவரது தாய் மற்றும் உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜவேணி பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேல்ராம்பேட்டில் நண்பர்களுடன் மதுகுடித்து விட்டு வந்தததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பேட் முதல் குறுக்குதெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகன் ராஜ்குமார் (வயது18). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புருசோத்தமன் இறந்து விட்டார். இதையடுத்து ருக்குமணி வீட்டுவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

    10-ம்வகுப்பு வரை படித்த ராஜ்குமார் அவ்வப்போது பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி ராஜ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    இதனை அவரது தாய் ருக்குமணி கண்டித்தார். இதனால் ராஜ்குமார் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். கோபம் தணிந்த பின் மகன் வீட்டுக்கு வருவான் என்று ருக்குமணி கருதி அவரை தேடவில்லை. நள்ளிரவு ஆகியும் ராஜ்குமார் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த ருக்குமணி வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது ராஜ்குமார் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு ருக்குமணி அலறினார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து ராஜ்குமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனையில் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் மாயமானார்.

    திருபுவனை:

    திருபுவனை பாரதியார் வீதியை சேர்ந்தவர் பலராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவர்களது மகள் திவ்யா (வயது 19).

    இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திவ்யா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் திலகவதி கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்றும் வீட்டில் திவ்யா செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை திலகவதி கண்டித்ததால் திவ்யா மனவருத்தத்துடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது வீட்டில் இருந்த திவ்யாவை திடீரென காணாமல் திலகவதி அதிர்ச்சி அடைந்தார்.

    உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் திவ்யா இல்லை. இதையடுத்து திலகவதி தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×